யாழில் மாணவியை துஸ்பிரயோகம்; பலாலி பொலிஸாரினால் ஒருவர் கைது..!

யாழ்.பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இதேவேளை வடக்கில் மாணவிகளை இலக்கு வைத்து பாலியல் துஸ்பிரயோகங்களும், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் பாவனையும் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் தொடர்பில் கூடிய அவதானத்தைச் செலுத்துங்கள்.வந்தபின் வருந்திப் பயனில்லை எனவே வரும்முன் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.