யாழில் மாணவியை அடித்த ஆசிரியர் மீது தாக்குதல்; இருவர் கைது..!

பருத்தித்துறையில் ஆசிரியர் ஒருவர் அவர் கற்பிக்கும் பாடசாலைக்கு முன்பாக வைத்து இன்று (ஒக்ரோபர் 3) தாக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் யாழ் பருத்தித்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஒரு மாதத்துக்கு முன்னர் தரம் 10 மாணவி ஒருவரை ஆசிரியர் தண்டித்தார் என்றும் அதன் தொடர்ச்சியாக மாணவியின் உறவினர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவியின் தந்தையும், உறவினர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.