சிபெட்கோ தலைவர் திடீர் பதவி விலகல்; மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு..!

இலங்கை பெற்றோலியம் சட்டபூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தனிப்பட்ட மற்றும் தொழில் காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.தலைவரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.