பெண் இராஜாங்க அமைச்சர் டயானா காற்சட்டையை கழற்றுவேன் என்றார் – ரோஹன பண்டார எம்பி

தான் அமைதியாக இருந்த போது, மலசல கழிவுகளை ஏற்றிக் கொண்டு வந்த பௌசர் தன்னுடைய உடலில் கவிழ்ந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

மின்னுயர்த்திக்கு அருகில் செல்லும் போது கயனா திட்டிக் கொண்டிருந்தார். காற்சட்டையை கழற்றுவேன் என்றார். அப்போது பெண்ணிடமிருந்து ஆணின் உரிமையை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.



வெளியே வாருங்கள் பாத்துக்கொள்கின்றேன் என்றார். ஆண்கள் என்றவகையில் எங்களுக்கு பாதுகாப்பு தேவை ஏற்பட்டது. எங்களிடம் வீடியோ உள்ளது என்றார்.

நாடாளுமன்றத்தின் கீழ் மாடிக்கு சென்று கொண்டிருந்த போது, ரோஹன பண்டார உறுப்பினரை கடுமையான தூசன வார்த்தைகளால் திட்டுவதை கண்டேன்.



இவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கூறினேன். ஆகையால், இது தொடர்பில் எவ்விதமான பாரபட்சமும் இன்றி விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி டயானா கமகே சபைக்கு வந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தம்மை தாக்கியதாக தெரிவித்த நிலையில் சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மக்களின் வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கையினை அனுபவிக்கும் இவர்கள் மக்களின் பிரச்சினைகளை மறந்து இலங்கையின் உயரிய சபையில் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வது அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.