இலங்கையின் பிரபல தொழிலதிபர் லலித் கொத்தலாவல காலமானார்..!

செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் செலான் வங்கியின் ஸ்தாபக தலைவருமான தொழிலதிபர் லலித் கொத்தலாவல தனது 84 வயதில் காலமானார்.கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.