சடுதியாகக் குறைவடைந்து வரும் மீன்களின் விலை..!

மீன்களின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்து வருவதாக மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அதிகளவு மீன் வளம் கிடைத்துள்ளதே மீன்களின் விலை குறைவடையக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வகை மீன்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட சந்தையின் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இதேவேளை சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மரக்கறிகளின் விலைகள் சடுதியாக மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மழை காரணமாக விலை உயர்வடைந்துள்ளதாக மனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன தெரிவித்துள்ளார்.