அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிருப்தி..!

கெஹலிய ரம்புக்வெல்லவை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கவலையடைவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே, கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தை கொண்டு நடத்துவதற்கான சக்தியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே ஜனாதிபதிக்கு வழங்குவதாக அவர் கூறினார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 5 உறுப்பினர்களே உள்ளதாகவும் இங்கிருந்து அமைச்சு பதவியை நீக்கி அதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கியுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் கட்சி என்ற ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.