சீனாவின் இராணுவ விநியோக மையமாக இலங்கை; அமெரிக்கா அவதானம்..!

சீனா அதன் இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் அந்நாட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளை சீனா அதன் உலக இராணுவ விநியோக மையங்களாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனா அதன் வெளிநாட்டு விநியோகங்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் இராணுவ பலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ நடவடிக்கைகளுக்கு இது இடையூறாக அமையலாமெனவும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.