மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்..!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பாடசாலைகளுக்கு சுற்று நிருபம் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.இதேவேளை, பாடசாலைகளில் ஆறாம் தரத்தை அடுத்த வருடத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் கல்வி அமைச்சர் கருத்து வெளியிட்டார்.