மக்களை இலக்கு வைத்து பிரமிட் திட்டங்கள்; பணத்தை இழந்த வேதனையில் இளம் ஆசிரியர் பலி..!

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படும் பிரத்தியோக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொல்கொட நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் பாணந்துறை கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 24 வயதுடைய நிபுன் நவோத் பெர்னாண்டோ என குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நீதிவான் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.உயிரிழந்தவர் கொழும்பு மருதானை பிரதேசத்தில் தனியார் பிரத்தியோக வகுப்பு ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.

குறித்த ஆசிரியர் , பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து மனவேதனை யடைந்திருந்தார் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.