தமிழர் பகுதியில் தொடரும் அவலம்; சிறுமிக்கு கருக் கலைப்பு, தாயார் உட்பட மூவர் கைது..!

முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் 13 வயதுடைய சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், இது தொடர்பில் (13.11.2023) நேற்றைய தினம் முல்லைத்தீவு பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனால் சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி கர்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை, உடந்தையாக இருந்த தாயார் மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் மருந்தக உரிமையாளர் ஆகிய மூவர் முல்லைத்தீவு பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.