உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்..!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என நடிகை ரேகா போஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் அரையிறுதியில் இந்தியா வென்று இறுதி போட்டிக்கும் நுழைந்து விட்டது.உலகின் பிரபலமான விளையாட்டுகளில் தங்களது அணி வென்றால் சிலர் ஆடையின்றி மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். அதாவது ஆடையின்றி ஓடுவது. இந்த கலாசாரம் பெரும்பாலும் மேலை நாடுகளில் உள்ளது. இதைத்தான் தற்போது ரேகா போஜும் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து ரேகா போஜ் கூறுகையில்,

இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கிண்ணத்தை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? என தெரிவித்துள்ளார்.இவருடைய இந்த பதிவைப் பார்த்த பலர் ரேகா போஜ் தனது சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். ஆனால் ரேகா போஜோ இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன் என்றார்.