ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு தடை விதிக்குமாறு கோரியது யார்? வெளியாகிய அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கை கிரிக்கெட் சபையே கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மீண்டும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு கடந்த ஆகஸ்ட மாதம் 28 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எழுதிய கடிதத்தினை எதிர்க்கட்சி தலைவர் இன்று சபையில் சமர்பித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

1. கிரிக்கெட் தரப்படுத்தலில் விளையாட்டு பணிப்பாளரின் தலையீடு

2 . விளையாட்டு அமைச்சின் செயலாளர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் சபையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ஆராய்ந்தமை

3. LPL-இற்கு 20 தொடரை நடத்த அனுமதி பெற வேண்டும் என அமைச்சு ஒன்றினால் அழுத்தம் விடுக்கப்பட்டமை4 . இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பினை தயாரிக்கும் விடயத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தலையிட்டமை

5. கணக்காய்வாளரினால் தயாரிக்கப்பட்ட பூரணப்படுத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கையை வெளியிட்டதன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமை

ஆகிய 5 விடயங்கள் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனை தவிர விளையாட்டுத்துறை அமைச்சர் தேசிய கிரிக்கெட் நிதியத்திற்கு 20% நிதியை நன்கொடை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 6 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தமது கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.