வறுமையிலும் சாதனை படைத்த தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள்..!

வவுனியா தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலையில் இந்த ஆண்டு நடைபெற்றிருந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.

விவசாய மற்றும் கூலித் தொழிலாளர்கள் வாழ்கின்ற வசதிகள் குறைந்ததும் தனியார் கல்வி நிலைய வாய்ப்புகள் அற்றதுமான இக் கிராமத்திலிருந்து 7 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளதோடு 100 புள்ளிக்கு மேல் 16 மாணவர்கள் புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளனர். 33 மாணவர்களில் 82% மானோர் 70 புள்ளிக்கு மேல் பெற்றமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.



தரம் 5 மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சைக்காக பயிற்றுவிப்பதில் ஆசிரியர் திரு சு. சிவபாலன் ஈடுபட்டிருந்தார்.


சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கி வரும் அதிபர் மற்றும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் திரு சு. சிவபாலன் அவர்களிற்கும் ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், வழிகாட்டல்களை வழங்கிய வலயக் கல்வி திணைக்கள கல்வியதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், செயலமர்வு கருத்தரங்குகளை ஏற்படுத்தி தந்த தொண்டு நிறுவனங்கள், வளவாளர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகத்தினர் தங்கள் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த வருடமும் 7 மாணவர்கள் சித்தியடைந்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.