கனடாவில் வேலை வாய்ப்பு பெற முன் அனுபவம் தேவையில்லை; வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..!

கனடாவின் ஒன்றியோ மாகாணத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கனடா தகவல் வெளியிட்டுள்ளது.

அங்கு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு தொழில் முன் அனுபவம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவுக்குள் பிரவேசிக்கும் குடியேற்றவாசிகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யக் கூடிய வகையில் நடைமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக மாகாண அரசாங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.மாகாணத்தில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தொழில் முன் அனுபவம் தடையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், தொழில் முன் அனுபவம் அற்றவர்களையும் நாட்டினுள் உள்வாங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.