ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை; பின்னணியில் வெளியான காரணம்..!

அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது நேற்று(18) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன்போது தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த அமலவீர நாணயக்கார என்ற 27 வயது இளைஞரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் தனது வீட்டிற்கு வெளிப்புறம் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக உறவினர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.சூட்டுக் காயங்களுக்குள்ளன இளைஞர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தலாவை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.