பாட விதானத்தில் பாலியல் கல்வியை இணைக்க நடவடிக்கை..!

பாடசாலை மாணவர்களின் பாட விதானத்தில் பாலியல் கல்வியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.2024ஆம் ஆண்டுக்கான கல்வி மறுசீரமைப்பு திட்டத்தில் இதற்கான யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளது.கல்வி மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவும் இந்த விடயத்தை அவதானத்துக்கு எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.