இந்தியாவின் இராஜதந்திரத் தோல்வி; மாலைதீவிலிருந்து வெளியேறவுள்ள இந்திய இராணுவம்..!

தனது நாட்டிலுள்ள இந்தியபடையை வெளியேற்றுமாறு இந்தியாவிடம் முறைப்படி அறிவித்துள்ளார் மாலைதீவின் புதிய அதிபர் முயிஸ்.

நேற்றுமுன்தினம் (17) புதிதாக பதவியேற்ற அவர், இந்தியாவிடம் அவர்களது இராணுவத்தை திரும்பப் பெறுமாறு “முறைப்படி கோரினார்” என்று மாலைதீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.



புதிதாக பதவியேற்ற அதிபரை இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்தார்.

அப்போது அதிபர் முயிஸ், மாலை தீவிலிருந்து இந்தி இராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் “முறைப்படி கோரினார்” என்று மாலைதீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.



இது ஈழத் தமிழர் விடயத்திற்குப் பின்னரான இந்தியாவின் மற்றுமொரு இராஜதந்திரத் தோல்வியாகவே அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகின்றது.