இலங்கையில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – இறைவரித் திணைக்களம்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 1 இலட்சத்து 98 ஆயிரத்து 253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக லசந்த அழகியவண்ண தலைமையில் அரச பொதுக் கணக்குகள் குழு (கோபா) அண்மையில் கூடியிருந்தது.இதன் போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முன்வைத்த விடயங்களின் மூலம் குறித்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இதற்கமைய, 18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 16 மில்லியன் மக்கள் வரி செலுத்துபவர்களாக இணங் காணப்பட்டுள்ளனர்.இந்த தரப்பினரை வரி செலுத்துதலில் இணைப்பதற்கான விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக பொதுமக்கள் செலுத்தும் பெறுமதி சேர் வரியை அரசாங்கம் முறையாகப் பெறுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது சுமார் 13 ஆயிரம் நிறுவனங்கள் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிறுவனங்கள் குறித்த வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவைளை, பொதுமக்களிடம் இருந்து பெறுமதி சேர் வரியை வசூலிக்கும் நிறுவனங்கள் சரியான முறையில் வரியை அரசாங்கத்திற்கு செலுத்தவதற்கான அமைப்பை தயார் செய்ய வேண்டும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.