அவுஸ்திரேலியா வசமானது உலகக் கிண்ணம்; இந்தியா படுதோல்வி..!

நடப்பு உலகக் கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இந்தியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி 2023 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

ஹகமதாபாத் – நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.241 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களையும், மார்னஸ் லாபுசான் 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.நடப்பு உலகக் கிண்ண தொடரில் இந்தியா எந்தப் போட்டியிலும் தோல்வியை சந்தித்திராத நிலையில், இறுதிப் போட்டியில் படு தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.