தரமற்ற மருந்துக் கொள்வனவு; அதிரடியாக கைது செய்யப்பட்ட சுகாதார துறை அதிகாரிகள்..!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை வாங்கியது தொடர்பாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நான்கு உயர் அதிகாரிகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் நிலைய பிரதம காவல்துறை பரிசோதகர் ஜயந்த பயாகல அமைச்சுக்குச் சென்று இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்ட நால்வரிடமும் சம்பவம் தொடர்பான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து இன்று பிற்பகல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகம்) நேரன் தனஞ்சய மற்றும் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.



முன்னதாக, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் விஜித் குணசேகர உட்பட சுமார் 10 பேரின் வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்திருந்தனர்.



மேலும், இந்த சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களை நிறைவேற்றுப் பணிப்பாளர் மட்டுமே பல சந்தர்ப்பங்களில் பதிவு செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *