பிரித்தானியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தமிழீழ தேசியக் கொடி நாள் நிகழ்வு..!

தமிழீழத் தேசியக்கொடி நாள் வெகு விமர்சையாக தமிழீழத்தின் தேசியக்கொடி பட்டொளி வீசிப்பறக்க பிரித்தானியாவின் லண்டன் மாநகரின் மையப்பகுதியில் தமிழர்களின் கலாச்சார பெருமையாக நடந்தேறியது.

இந்த வருட தமிழீழத் தேசியக்கொடி நாளானது (21) ஆக இருந்த போதிலும் பாடசாலை சிறார்களையும் இளையோர்களையும் அரவணைத்து அவர்களும் பங்கெடுக்கும் விதமாக நேற்று ஞாயிற்றுக் கிழமை (19) அன்று நடந்தேறியது.



நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலக வரலாற்று மையத்துடன் இணைந்து அனேகமான தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலக வரலாற்று மைய முக்கியஸ்தர்கள், பாலா மாஸ்டர் மற்றும் கவுன்சிலர் பரம் நந்தா கலந்து கொண்டு சிறப்பிக்க நடந்தேறியது.

தமிழீழ தேசியக்கொடியை நாடு கடந்த தமிழீழ அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சொக்கலிங்கம் யோகலிங்கம் பெரும் பவனியாக Trafalgar Square north terrace ல் தொடங்கி Trafalgar Square மையப் புள்ளியான நிகழ்வு மேடையை பேண்ட் வாத்தியங்கள் முழங்க கொண்டுவந்தார்



சிறுவர்களின் கலாச்சார நடனங்களுடனும் பேச்சுக்களுடனும் நடைபெற்ற நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து நேரலையில் தொடர்பு கொண்டு சிறப்புரையாற்றினார்.



இறுதியாக உறுதி உரையுடன் உலக வரலாற்று மைய பொறுப்பாளர்களிடம், வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வில் ஏற்றுவிக்கப்பட ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *