ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலேய் தெரிவு..!

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலேய்(Javier Milei) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜேவியர் மிலேய் 56 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜேவியர் மிலேய்க்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.