யாழில் பொலிஸின் சித்திரவதையாலேயே அலெக்ஸ் மரணம்; மருத்துவ அறிக்கையில் தெரிவிப்பு..!

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் காவலில் வைக்கப்பட்டிருந்து மரணமடைந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்ற இளைஞன் பொலிஸாரின் சித்திரவதையாலயே சிறுநீரகம் செயலிழந்து மரணம் இடம் பெற்றிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சித்தங்கேணியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.“அந்த அறிக்கையில் உடல் முழுவதும் அடிகாயங்கள், இயற்கையான மரணம் இல்லை, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் எனவும் சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.