விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் மேலதிக வகுப்புகளுக்கு தடை; எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..!

ஊவா மாகாணத்தில் தரம் ஒன்று முதல் தரம் 5 வரையிலான மாணவ மாணவியருக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் நேரத்தின் பின்னர் கட்டணம் அறவீடு செய்து நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் முழுமையாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2/2023 என்ற சுற்றுநிரூபம் ஒன்றின் மூலம் இந்த தடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு, வலயக் கல்வி பணிமனை, அதிபர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலதிக நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றதா என கண்டறிந்து கொள்வதற்காக விசாரணை குழுக்கள் கடமையில் அமர்த்தப்பட உள்ளது.

ஆசிரியர்களினால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளுக்கு சமூகமளிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் உதாசீனம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு முழு அளவில் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மாகாண ஆளுநர் உள்ளிட்டோர் செய்திருந்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்