கனடா அரசு பிறப்பித்துள்ள புதிய தடை உத்தரவு..!

உலகம் முழுவதிலும் அழிவினை சந்தித்து வரும் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் நோக்கில் கனடா அரசானது புதிய உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது.

அவ்வகையில், கனடாவில் யானை தந்தங்கள் மற்றும் காண்டா மிருகக் கொம்புகள் ஆகியனவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கனடாவின் சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் ஸ்டீபன் குயில்பியெல்ட் தெரிவிக்கையில்,

“காண்டாமிருகங்களின் கொம்புகள் மற்றும் யானைகளின் தந்தங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் இந்த தடை நடைமுறைப்படுத்தப்படும்.யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி அவசியம்.

ஆப்பிரிக்க யானைகளும், காண்டாமிருகங்களும் அழிவடைந்து வருகிறது. இந்நிலையில், உயிர்ப் பல்வகைமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.அடுத்த தலைமுறையினருக்காக, யானைகள் காண்டாமிருகங்கள் என்பனவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்