சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்..!

இன்னும் ஒரு சில நாட்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர கூறியுள்ளதாவது,

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கடந்த உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளும், இந்த வாரம் வெளியிடப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.அத்தோடு, மேற்கூறப்பட்ட விடயத்தை நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கல்வி அமைச்சரும் கூறியிருந்தார்.அதன்போது கல்வி அமைச்சர், பல்கலைக்கழக, ஆசிரியர்களின் பரீட்சைக் கொடுப்பனவு தொடர்பில் சாதகமான வேலைத் திட்டமொன்று திட்டமிடப்பட்டு வருகின்றதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.