யுத்தத்தில் போராடி உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு நல்லூரில் நினைவாலயம்..!

மூன்று தசாப்தகால யுத்தத்தில் போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் வகையில், 24 ஆயிரம் பெயர்கள் தாங்கிய கல்வெட்டுகளுடன் நினைவாலயம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நினைவாலயம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ளது.



1982 நவம்பர் 27 ஆம் திகதி முதல் 2009 மே 18ஆம் திகதி முதல் யுத்தத்தில் போராடிய சுமார் 24 ஆயிரத்து 379 பேரின் பெயர்களை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கிய வகையில் நினைவாலம் உருவாக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் யாழ். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்னள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்