முல்லைத்தீவு பகுதியில் சிறுமி துஸ்பிரயோகம்; இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..!

சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், சிறுமியின் மூத்த சகோதரியின் கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பானது நீதிபதி இளஞ்செழியனால் இன்று (22.11.2023) வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இச் சம்பவமானது 2012 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.



குறித்த நபர் சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டுக்குள் கொண்டு சென்று தகாத முறையில் நடந்து கொண்ட பின்னர் வீதியில் சண்டை பிடித்துக் கொண்டிருந்த போது வீதியில் சென்றவர்களால் தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மூத்த சகோதரியை வைத்தியசாலையில் விட்டுவிட்டு எதிரி கடத்தி சென்று காட்டுக்குள் வைத்து தவறான முறையில் நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியம் அளித்துள்ளார். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி சம்பவத்தை உறுதிப்படுத்தி சாட்சியம் வழங்கி உள்ளார்.



எனினும், எதிரியின் மனைவியான சிறுமியின் மூத்த சகோதரி கணவரை காப்பாற்ற நீதி மன்றில் பொய் சாட்சியம் வழங்கியதை, அரச சட்டத்தரணி அவர் ஏற்கனவே பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை முன்வைத்து பொய் சாட்சியம் வழங்கியமை தெரியவந்துள்ளது.

எதிரியை குற்றவாளியாக தீர்ப்பளித்த நீதிபதி 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 22 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அதனை கட்டத் தவறும் பட்ச்சத்தில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கினார்.



மேலும் சிறுமிக்கு 2 இலட்சம் நட்டஈடு செலுத்த வேண்டும் கட்ட தவறும் பட்ச்சத்தில் ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்