க.பொ.த உயர்தர பரீட்சை 2022(2023) திட்டமிட்டவாறு நடத்தப்படும் – கல்வி அமைச்சு

2022(2023) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்படவுள்ளது.உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன் போது, ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், மற்றுமொரு மனு வாபஸ் பெறப்பட்டது.இதேவேளை இவ்வாரம் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தர திருத்தப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்