முல்லைத்தீவில் இரகசிய தகவலின் அடிப்படையில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது..!

முல்லைத்தீவு – கொக்குளாய் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி நேற்று (22.11.2023) மாலை 5 மணியளவில் பொலிஸாரின் சோதனையிட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொக்குளாய் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரிலே 32 வயதுடையவர் இடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (23.11.2023) நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்