ராஜபக்சர்களின் குடியுரிமை இரத்து; நீதி அமைச்சர் விஜயதாச வெளியிட்ட தகவல்..!

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதீப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலோ அல்லது மோசடியில் ஈடுபடுவதற்காகவோ நிதியை பயன்படுத்தினால் அதற்கு நிறைவேற்று அதிகாரம் பொறுப்புக்கூற வேண்டும்.



அந்த வகையில் நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரம் கட்டுப்பட வேண்டும்.

எனவே, பொருளதார நெருக்கடிக்கு காரணமானர்கள் குறித்து தேவையேற்படின் விசேட அதிபர் விசாரணை ஆணைக் குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிபருக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரம் உள்ளது.



குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிழைத்துள்ளனர் என ஆணைக்குழு பரிந்துரைத்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட நபர்களின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இல்லாது செய்ய முடியும்.

இதற்கான யோசனையை அமைச்சரவையின் அனுமதியுடன் நாடாளுமன்றித்திலும் முன்வைக்கலாம்.

அதனை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்தார்.



உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்