கிராம உத்தியோகத்தர்களின் கொடு்ப்பனவு தொடர்பில் வெளியான தகவல்..!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறைகள் மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கிராம உத்தியோகத்தர்களின் கொடு்ப்பனவுகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் 18வது அமர்வு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் தலைமையில் நேற்று (22) இடம்பெற்ற போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இது தொடர்பில் பேசிய பாட்டலி சம்பிக்க ரணவக்க, “அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீட்டு நடைமுறை மற்றும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் கிராம உத்தியோகத்தர்களின் கொடு்ப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்கு முதலில் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக உத்தியோகத்தர்களின் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.அத்தோடு, கிராம உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கங்கள் நடத்தும் கலந்துரையாடல்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்கத் தேவையான ஒருங்கிணைப்பை வழங்குவதற்கு வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்