கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; இதுவே எமது இலக்கு – எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டின் கல்வித்துறையை பலப்படுத்துவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் இலக்காக காணப்படுவதாகவும், இது ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த சம்பம் (21) ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் முட்டி மோதிக்கொள்வதற்கு பதிலாக யோசனைகள்,

முன்மொழிவுகள், வாதங்களை பரிமாறிக்கொள்வதற்கும், தரவுகள், தகவல்கள், ஆதாரங்கள் மற்றும் புதிய எடுத்துரைப்புகள் மூலம் எழும் எண்ணக்கருக்களை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான செயற்பாடுகளே இங்கு இடம் பெற வேண்டும் என்றும், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சிலர் ஒக்ஸிஜனுக்கும் காபனீரொட்சைட்டுக்கும் வித்தியாசம் கூட தெரியாத கல்வியறிவு இல்லாமல், மிளகாய் பொடியை தூவிய கல்வியில் பெயர் கூட இல்லாதவர்கள் பாராளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தை தான் பார்த்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



அறிவுப் புன்புலமும் கல்வியும் இல்லை என்றால்,எந்தக் கேள்விக்கும் வாள், குத்து, தோட்டா, வெடிகுண்டு, பயோனெட், தாக்குதல், துன்புறுத்தல், கொடுமைப்படுத்துதல் என்பவற்றை பதிலாக வழங்கி தங்கள் இருப்பை உறுதி செய்பவர்கள் இருந்தாலும், எமது எதிர்கால சந்ததியினருக்கு அறிவை மையமாக கொண்ட நாட்டையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும், இதனூடாக ஸ்மார்ட் பிரஜைகள் உருவாகுவார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

பாடசாலைகளில் அரசியல் பேசுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர் என்றும், அரசியல் செய்வதற்கு பெற்றோருக்கு மாத்திரமா உரிமை உள்ளது என்றே அவ்வவாறு கூறுபவர்களிடம் வினவ வேண்டியுள்ளதாகவும், பெற்றோர் என்ன செய்தார்கள் என்பதை அறிய பாடசாலை பிள்ளைகளுக்கும் உரிமை உண்டு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலை பிள்ளைகளும் 12-13 இலட்சம் கடனாளிகளாக மாறிவிட்டனர் என்றும், தனிநபர் கடன் 13 இலட்சமாக அதிகரிக்க இந்த முதியவர்களே காரணமாக இருந்துள்ளனர் என்றும்,பிள்ளைகள் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு தகவலையும் சமூக ஊடகங்களுக்குச் சென்ற பிறகு பெறலாம் என்றும், விவசாயம், கைத்தொழில், மீன்பிடி போன்ற துறைகளில் பெரியவர்களை விட பாடசாலை பிள்ளைகளுக்கு அதிக அறிவாற்றல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, நாட்டின் பாடசாலை மாணவர் சமூகத்தை முட்டாள்களின் கூட்டம் என்று கருத வேண்டாம் என விமர்சிப்பவர்களுக்கு கூறிக் கொள்வதாகவும், வங்குரோத்தான நாட்டின் குடிமக்கள் என்ற முறையில்,பாடசாலை மாணவர்களும் உண்மைக்கும் பொய்க்கும், யதார்த்தத்துக்கும் புனைவுக்கும் உள்ள வித்தியாசத்தை அறியும் உரிமை உள்ளதாகவும், இந்த உரிமையை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.



பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் 49 ஆவது கட்டத்தின் கீழ் மத்திய கொழும்பிலுள்ள Wolfendhal Girls’ High School க்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்