100 ரூபா தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!

களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 100 ரூபாய் தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் சந்தேக நபர் ஒருவர் இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடையவராவார்.இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அண்மையில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் 100 ரூபாய் தருவதாகக் கூறி வீட்டிற்கு வெளியே அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி பணத்தை வாங்க மறுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.