அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி நாளை நாடளாவிய ரீதியில் போராட்டம்..!

அரச ஊழியர்களுக்கு 20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் நாளை (27) அரச ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் பிரதி செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.



எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்



நாடு முழுவதிலும் உள்ள அரச நிறுவனங்களுக்கு முன்பாக 27ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும். கொழும்பில் உள்ள பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தன சூரியஆராச்சி சுட்டிக் காட்டியுள்ளார்.



2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள பின்புலத்திலேயே இவ்வாறு அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற் சங்கங்கள் ஒன்றியம் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளது.