சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு எப்போது? அறிவிப்பு வெளியாகியது..!

கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் மீள் திருத்தம் செய்யப்பட்ட உயர்தரப் பெறுபேறுகள் என்பன இன்னும் ஒருசில தினங்களில் வெளியிடப்படும் எனவும் சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெறும் மாணவர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் கடந்த வெள்ளி வெளியாகியிருந்தது. எனினும் சாதாரண தரப் பெறுபேறுகள் இதுவரை வெளியாகவில்லை. காலம் தாழ்த்தி நடைபெற்ற பரீட்சை, வயது அதிகரிப்பு, கல்வி இழப்பு போன்ற காரணங்களால் மாணவர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர்.இந்நிலையில் ஒருசிலருடன் மேற்கொண்ட உத்தியோக பூர்வமற்ற உரையாடல்களின் ஊடாக தரவேற்றும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும், செவ்வை பார்க்கும் பணிகள் நிறைவடைந்ததும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் பெரும்பாலும் 28ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.உங்கள் பெறுபேறுகளைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை CLICK செய்யுங்கள்