புதிய நியமனங்களைப் பெற்ற அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு..!

நியமனங்களைப் பெற்ற அதிபர்கள் புதிய தவனையின் போது பாடசாலைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

தற்போது 4,672 அதிபர்களுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏதிர்வரும் பாடசாலை விடுமுறையின் பின்னர், ஆரம்பமாகும் பாடசாலை தவனையின் போது இவர்கள் பாடசாலைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.



பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிரி ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தரர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

இந்த ஆசிரியர்கள் தற்போது மாகாண மட்டத்தில் மாதாந்த பயிற்சிகளை பெற்று வருகின்றனர். கஷ்டப்புற பாடசாலைகளில் தற்போது கடமையாற்றும் அதிபர்களுக்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.



கல்வி நிர்வாகத்தில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் பூரணப்படுத்தப்படும். கல்வி நிர்வாகத்தில் 808 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தற்போது பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன். 404 பேருக்கு மிக விரைவில் நியமனங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் நாடு முழுவதும் 1250 கொத்தணிப் பாடசாலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக அருகில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரு குழுவாக செயற்படும்.

குறிப்பாக மொனராகலை போன்ற மாவட்டங்களில் இவ்வாறான தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் காணப்படுகின்றன. அந்தப் பாடசாலைகளை பராமரிக்கும் வசதி பெற்றோர்களுக்கு இல்லை.



ஆனால், வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ், கொத்தணிக்குள் உள்ள பாடசாலைகள் அதில் உள்ள ஏனைய பாடசாலைகளினால் கண்காணிக்கும் முறை அமைக்கப்படும். அதன் பின்னர் பாடசாலைகளுக்கு இடையே வளங்கள் பிரிந்து செல்லும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.