வவுனியாவில் இருந்து இம்முறை இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்..!

இலங்கை நீதித்துறையில் இம்முறை வவுனியா மாவட்ட ரீதியில் இளவயதில் நீதிபதியாக தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.

வவுனியா மாவட்டத்தில் இம்முறை இளவயது தமிழ் பெண் நீதிபதியாக வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சலா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு நீதிபதியாகவுள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யவும் உள்ளார்.



வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

 

மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இரண்டாவது இளம் பெண் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இம்முறை 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில், இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.