69வது அகவையில் தமிழினத் தேசியத் தலைவன்..!

ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை தமிழினம் தன்னெழுச்சி கொண்டு இந்த பூமிப்பந்தின் தம்மை நிலைநிறுத்திக் கொள்கின்றது. தன்னெழுச்சி கொள்ளும் தமிழினம் உலகமே வியந்து நோக்கும் ஒரு தலைவனை தன் இனத்திற்காக பிரசவிக்கிறது.மக்களுக்காக தலைவனும் தலைவனுக்காக மக்களும் என்ற அதிசய கோட்பாடு தமிழினத்தில் தோன்றிய அற்புதமான காலத்தில் வாழ்கிறோம். தமிழினத்தின் அடையாளமாக, தலைவன் என்பதின் இலக்கணமாக திகழும் தமிழீழ தேசியத் தலைவரின் பிறப்பை கொண்டாடி எழுச்சி கொள்ளும் இந்நாள் தமிழராக பிறந்த அனைவருக்கும் உரியது.

தமிழின விடுதலைக்காக தன்னை உவந்தளித்த தலைமகன். தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 69வது அகவைநாளை முன்னிட்டு உலகத் தமிழருடன் நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்என பேர்த் வாழ் தாயக உறவுகள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.