கனடாவில் பெருந்தொற்றாக மாறியுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள்..!

அவுரா ப்ரீடம் என்ற பெண்கள் உரிமை அமைப்பின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மாரிஸ்ஸ கொக்கோரொஸ் கனடாவில் பெண் கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

“கனடாவில் பெண்கள் படுகொலை செய்யப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமியர் அதிகளவில் பால்நிலை அடிப்படையில் கொலையுறுகின்றனர்.

பெண்கள் படுகொலை செய்யப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக இந்த நிலைமை தேசிய அவசர நிலைமையாக அறிவிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருந்தொற்றாக மாறியுள்ளது.

கடனாவில் இரண்டு நாளுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் படுகொலைச் செய்யப்படுகின்றனர்.” என்றார்.