ரணிலின் அதிரடி; அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியப்பட்ட ரொஷான் ரணசிங்க..!

விளையாட்டு அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி நீக்கத்துக்கான கடிதம் அதிபர் செயலகத்தினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விளையாட்டுத்துறை அமைச்சு உள்ளிட்ட சகல அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

தன்னை பதவி நீக்கியதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளமையை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் கருத்து வெளியிட்டு சில மணித்தியாலங்களிலேயே இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.