சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ஆம் திகதிகளுக்கு இடையிலான காலத்தில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2023 மே 29 முதல் ஜூன் 8 வரை இந்தப் பரீட்சை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கு 300,000 பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.கடந்த உயர்தரப் பரீட்சை நடாத்துவதில் தாமதம் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு என்பனவும் இந்த பெறுபேறுகளை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தியதாக திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.