ரணிலைத் தொடர்ந்து சஜித்தின் அதிரடி; தூக்கி எறியப்பட்ட வடிவேல் சுரேஸ் எம்பி..!

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்திருந்தார்.இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறைத் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவருக்கான நியமனக் கடிதத்தினை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் லெட்சுமணன் சஞ்சய் தெரிவிக்கையில்,“நான் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன், இளைஞர்களுக்காக பணியாற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன். எதிர்காலத்தில் இளைஞர்கள் அரசியலில் முக்கிய இடத்தை வகிப்பார்கள்” என கூறினார்.