சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட பரீட்சை திணைக்களம்..!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30) அல்லது நாளை மறுதினம் (01) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (29-11-2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“உயர்தரப் பரீட்சை தாமதமாகாது. பரீட்சை அட்டவணை அச்சிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தயாராக உள்ளனர். இரண்டு தரப்பினரும் மட்டுமே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். உயர்தரப் பரீட்சை 3 மாதங்கள் தாமதமானால், மார்ச், ஏப்ரல் திட்டமிடப்பட்ட சாதாரண தர பரீட்சை மே, ஜூன் மாதங்களுக்கு சென்று விடும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.உங்கள் பிரதேசத்து நிகழ்வுகள் மற்றும் செய்திகளை எமது செய்தித் தளத்தில் பகிரத் தயாராக உள்ளோம். செய்திகளை Tamilpori@yahoo.com என்ற ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்