யாழில் பயங்கர விபத்து சம்பவம்; வைத்தியர் உட்பட இருவர் பலி..!

யாழ்ப்பாண பகுதியொன்றில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (01-12-2023) கல்லூண்டாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.இந்த விபத்து சம்பவத்தில் வைத்தியரும், அவரது நண்பரும் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வைத்தியர் மற்றுமொரு நபருடன் யாழ்ப்பாண நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​கல்லூண்டாய் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், வைத்தியரின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.