நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.

குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வு பெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார்.மாகாண சபைகளின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் பாடசாலைகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.எதிர்வரும் பாடசாலை தவணையின் போது ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர சுட்டிக்காட்டினார்.