ஹந்தான மலை உச்சியில் மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மாயம்..!

ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் ஹந்தான மலை உச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோசமான வானிலை காரணமாக கடும் மூடுபனி நிலவுகிறது. இப்பகுதிக்கு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது, என்றனர்.எவ்வாறாயினும் மாணவர்களை மீட்பதற்காக இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.