யாழ் உட்பட வடக்கில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறும் குற்றச்செயல்..!

யாழ் நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, பெருமளவான மாவா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 33 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வவுனியா நகரப் பகுதிகளிலும் மாணவர்களின் மத்தியில் போதைப் பாவனை அதிகரித்துள்ளது