இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்று சரணடையுமா ஹமாஸ்???

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போர் இரண்டு மாதங்களாக ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பை சரணடையுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.“போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு துவங்கிவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது, உங்கள் தலைவன் சின்வாருக்காக நீங்கள் உயிரை விட வேண்டாம். சரணடையுங்கள்” என பெஞ்சமின் நெதன்யாகு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் சரணடைந்துள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் இராணுவம் அதற்கான எந்த சான்றாதாரங்களையும் வெளியிடவில்லை. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு தமது உறுப்பினர்கள் யாரும் சரண்டையவில்லை எனத் தெரிவித்துள்ளது.